கோப்புப்படம் 
உலக செய்திகள்

பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று

பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் புதிதாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,66,749 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று ஒரே நாளில் 205 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 36,788 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 லட்சத்து 51 ஆயிரத்து 765 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1,78,196 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்சின் மணிலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலும் மற்றும் புதிய பாதிப்புகளும் காணப்படுகின்றன என்றும் தெரிவித்து உள்ளது. அந்நாட்டில் இதுவரை 2.03 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு