கோப்புப்படம் 
உலக செய்திகள்

பின்லாந்தில் விமானம் விழுந்து நொறுங்கியது; விமானி பலி

பின்லாந்தில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி விமானி பலியானார்.

தினத்தந்தி

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிவாஸ்கிலா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்தார்.

கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதை தொடர்ந்து விமானம் விமான நிலையத்துக்கு அருகிலேயே விழுந்து நொறுங்கியது.

இதை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த கோர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு