உண்மையில் இக்கோபுரம், ஒரு தேவாலயத்தின் அருகே அதன் மணிக்கூண்டாக கட்டப்பட்டதாகும்.
இக்கோபுரத்தின் கட்டுமானப் பணி, கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இதைக் கட்டி முடிக்க சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் இருந்தே இக்கோபுரம் வலதுபுறமாகச் சாய ஆரம்பித்துவிட்டது. அந்த சாய்வைத் தடுக்கும் வகையில் திட்டமிட்டுத்தான் கோபுரத்தின் உச்சி 3 அடுக்குகளையும் கட்டினார்கள். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. கோபுரம் தொடர்ந்து சாய்ந்துகொண்டுதான் இருந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறிது சிறிதாகச் சாய்ந்துகொண்டே இருக்கும் இந்தக் கோபுரம், ஒருநாள் முழுமையாகத் தரையில் விழுந்துவிடும் என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.