உலக செய்திகள்

கென்யாவில் பரிதாபம்: பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல் - 13 மாணவர்கள் பலி

கென்யாவில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலியாகினர்.

தினத்தந்தி

நைரோபி,

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள ககமிகா நகரில் தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு நெரிசல் ஏற்பட்டது.

இதில் மாணவர்கள் பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு சரிந்தனர். இந்த கோர சம்பவத்தில் 13 மாணவர்கள் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா