உலக செய்திகள்

சீனாவில் இருந்து டெல்லிக்கு 4 சிறப்பு விமானங்கள் இயக்க திட்டம்

சீனாவில் இருந்து டெல்லிக்கு 4 சிறப்பு விமானங்கள் இயக்க, ‘ஏர் இந்தியா’ திட்டமிட்டுள்ளது.

பீஜிங்,

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டு விமான சேவைகள் அனைத்தும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டுமே நடைபெறுகின்றன.

அந்த வகையில் சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு வரும் நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் 4-ந்தேதி என 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதே போன்று டெல்லியில் இருந்து சீனாவின் மத்திய நகரமான உகான் நகருக்கு வரும் 6-ந்தேதி ஒரு விமானத்தை இயக்க இந்தியா தயாராகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்