உலக செய்திகள்

நைஜீரியாவில் விமான விபத்து: ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் பலி

நைஜீரியா நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் பலியாகி உள்ளார்.

தினத்தந்தி

கடுனா,

நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே அந்நாட்டின் விமான படையை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை விபத்தில் சிக்கியுள்ளது.

இதில், நைஜீரிய நாட்டு ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இப்ராகிம் அட்டாஹிரு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 54. கடந்த ஜனவரியில் அவர் இந்த பதவியை ஏற்று கொண்டார்.

அவருடன் பயணித்த உதவியாளர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இந்த விபத்திற்கான காரணம் பற்றியும் உடனடியாக தெரியவரவில்லை.

நைஜீரியாவின் அபுஜா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ராணுவ விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றபொழுது விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 7 பேரும் கொல்லப்பட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்