உலக செய்திகள்

அமெரிக்காவில் விமான விபத்து; வெளியே குதித்து உயிர் தப்பிய விமானிகள்

அமெரிக்காவின் டெக்சாஸில் தீப்பிடித்து சிதறிய விமானத்தில் இருந்த 2 விமானிகள் வெளியே குதித்து காயத்துடன் தப்பினர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லேக் ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில், 2 விமானிகள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், விமானம் நடு வழியில் திடீரென தீப்பிடித்து வெடித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த விமானம் விழுந்தபோது, கீழே 3 வீடுகள் இருந்துள்ளன. எனினும், யாரும் இதில் சிக்கவில்லை. குடியிருப்புவாசிகளுக்கும் காயம் ஏற்படவில்லை. விமானிகளில் ஒருவர் தரையில் கிடந்து உள்ளார். மற்றொருவர் ஒயர்களுக்கு இடையே சிக்கி இருந்துள்ளார். காயமடைந்த விமானிகள் இரண்டு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்