அல்மாத்தி,
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் உள்ள அல்மத்தி நகரில் இருந்து தலைநகர் நுர்சுல்தன் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 95 பயணிகள் 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 100 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாததே கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதற்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்தையடுத்து, நிகழ்விடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில், 6 பயணிகள் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.