உலக செய்திகள்

‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்கச்செய்ய வேண்டும்: ஜோ பைடனிடம் மோடி வலியுறுத்தல்

‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்கச்செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

வாஷிங்டன்,

இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு அந்த நாடு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த விசாக்களை நம்பித்தான் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. ஆனால் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்த விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். இதன் காரண மாக எச்-1பி விசா கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அமெரிக்காவை இந்திய தொழில் வல்லுனர்கள் எளிதில் அடைவது பற்றி குறிப்பிட்டார். அந்த நேரத்தில் எச்-1பி விசா எளிதில் கிடைக்கச்செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த தகவலை வெளியறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா, வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு