கோப்புப்படம் 
உலக செய்திகள்

போலந்து நாட்டில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 29,978 பேருக்கு கொரோனா பாதிப்பு

போலந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வார்சா,

இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலந்து நாட்டில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் 29,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 21,20,671 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 575 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.

போலந்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 17,07,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,62,485 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்