ஜப்பானில் லேன் சூறாவளி வலுவிழந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது. மத்திய மற்றும் மேற்கு ஜப்பானில் நில சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்தும் உள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஜப்பானில் பிரதமருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கி இரவு 8 மணியளவில் முடிவடையும். மழையை பொருட்படுத்திடாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த கீழவையில் உள்ள 465 இடங்களுக்கு ஏறக்குறைய 1,200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகாரபூர்வ முடிவு இன்று இரவு வெளியாகும்.
இந்த தேர்தலில் மீண்டும் அபே தேர்வு செய்யப்பட்டால் உலக போருக்கு பின் நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார்.