உலக செய்திகள்

தெற்காசிய தீவிரவாத குழுக்கள் மீது வேற்றுமை இன்றி நடவடிக்கை எடுங்கள்; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

தெற்காசியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக எந்த வேற்றுமையும் இன்றி நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் அமெரிக்கா இன்று கேட்டு கொண்டது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் பாஜ்வாவை இன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார்.

இதுபற்றி பாம்பியோவின் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பு அதிகாரியான ஹெதர் நாவெர்ட் கூறும்பொழுது, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான வழிகளை பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான தேவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தெற்காசியாவில் உள்ள அனைத்து தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வேற்றுமை இன்றி நடவடிக்கை எடுக்கும்படி பாஜ்வாவிடம் பாம்பியோ கேட்டு கொண்டார் என தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு