உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாடிகன்சிட்டி,

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கரம் முற்றிலும் ஓங்கிவிட்டது. கடைசியாக தலைநகர் காபூலையும் நேற்று கைப்பற்றி உள்ள அவர்கள், அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

தலீபான்களின் இந்த வன்முறையில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை வெளியிட்டு உள்ளார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

வாடிகனில் நேற்று வாராந்திர வழிபாட்டின்போது இது குறித்து அவர் கூறுகையில், அன்பு சகோதர சகோதரிகளே, ஆப்கானிஸ்தான் குறித்த ஒருமித்த அக்கறை கொள்வோரின் குழுவில் நானும் இணைகிறேன். அவர்களுக்காக அமைதியின் இறைவனிடம் என்னுடன் இணைந்து பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் ஆயுதங்களின் இரைச்சல் ஓய்ந்து, உரையாடலின் மேஜையில் தீர்வுகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்