உலக செய்திகள்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் வாடிகன் திரும்பிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்

குடல் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்கு பின்னர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார்.

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் ஆஸ்பத்திரியிலேயே தினசரி பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்