உலக செய்திகள்

நேபாளத்தில் கொரோனா பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு; கர்ப்பிணி பலி

நேபாளத்தில் கொரோனா பாதிப்புக்கு கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் முதல் பலி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

காத்மண்டு,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

அந்நாட்டில், 281 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதுவரை யாரும் பாதிப்புக்கு பலியாகாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பு அதிகாரியான சமீர் குமார் கூறும்பொழுது, கடந்த 6ந்தேதி 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்தது. மறுநாள் தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியமுடன் வீடு திரும்பினர்.

ஆனால், அந்த பெண் கிராமத்தில் தனது வீட்டில் இருந்தபொழுது, காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து கடந்த 14ந்தேதி துலிகேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார். விரிவான விசாரணை மற்றும் தொடர் பரிசோதனைகளில் இருந்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவே கொரோனாவுக்கு நாட்டின் முதல் உயிரிழப்பு என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்