உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு; 16 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானின் மேற்கே கோர் மாகாணத்தில் பிரோஷ் கோ நகரில் காவல் அலுவலகத்திற்கு வெளியே இன்று சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு