உலக செய்திகள்

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அலாஸ்கா,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஹோமர் நகருக்கு தென்கிழக்கே 605 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்களை பற்றி உடனடியாக தெரியவரவில்லை.