* சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு பாகிஸ்தான் கடந்த வாரம் தடை விதித்தது. தற்போது இந்த தடையை அந்த நாட்டு அரசு நீக்கிவிட்டது. அதனை தொடர்ந்து, சீனாவில் இருந்து 2 விமானங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வந்தது.
* அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்சபையில் ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீதான விசாரணையில் இறுதி வாதங்கள் நேற்று தொடங்கியது. இன்னும் இரு தினங்களில் விசாரணை நிறைவுபெறும் எனவும், பதவி நீக்க விசாரணையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.