டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவிற்கு கிழக்கே, சிபா மாகாணத்தில் 80 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.