உலக செய்திகள்

வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

தினத்தந்தி

காரகாஸ்,

உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால், எல்லை பகுதியருகே அமைந்த வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து பலர் தப்பி வெளியே ஓடினர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சியில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார்.

நிலநடுக்கத்தின்போதும், அதற்கு பின்னரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை. இதன்பின்பு, ஜூலியா மாகாணத்தில் 3.9 மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்