உலக செய்திகள்

அமெரிக்காவில் அமேசான் விற்பனை நிலையத்தில் கர்ப்பிணி சுட்டுக்கொலை

அமெரிக்காவில் அமேசான் விற்பனை நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தினத்தந்தி

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் லேக்வில்லே பகுதியில் அமேசான் விற்பனை நிலையம் உள்ளது. இங்குள்ள வாகன நிறுத்தத்தில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிறுவன ஊழியர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் இறந்துபோன அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்தனர். ஆனால் அந்த குழந்தையின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணை சுட்டு கொன்றது டொன்டே ரபேல் மெக்ரே என்பதும், அவர் அமேசான் ஊழியர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு