உலக செய்திகள்

டிக் டாக் செயலி: டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்

சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதிக்க நடவடைக்கைகளை மேற்கொண்டார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் புதிய பதிவிறக்கங்களுக்கு தடை விதித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்பின் உத்தரவுகளை ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதிக்க நடவடைக்கைகளை மேற்கொண்டார்.

புதிய பயனர்கள் இந்த செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி தடை உத்தரவு பிறப்பித்தார். நடைமுறைக்கு வராத அந்த உத்தரவுகளை நீதிமன்றங்கள் தடுத்தன. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டிருக்கிறார்.

அதே சமயம் அந்த செயலிகள் கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி ஆராய புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னர் தனியாக அமைக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு