* சோமாலியா நாட்டின் பேல்டோக்லே நகரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் படை தளம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, அல் ஷபாப் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான் தாக்குதல் நடத்தியது. இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரணை நடத்திய ராபர்ட் முல்லர் பற்றி விசாரிக்கும்படி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனிடம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உதவி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
* பெருநாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் மார்டின் விஸ்காரா அறிவித்தார். இதையடுத்து விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
* பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவிவரும் காரணத்தால் சுமார் 20,000 பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்துள்ளது.