லார்னேகா,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐரோப்பிய நாடுகளான சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் நேற்று சைப்ரஸ் புறப்பட்டு சென்றார்.
அங்குள்ள லார்னேகா சர்வதேச விமானநிலையம் போய் சேர்ந்த ஜனாதிபதியை, சைப்ரஸ் நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி ஜார்ஜியோஸ் லக்கோடிரிபிஸ் வரவேற்றார்.
முன்னதாக சைப்ரஸ் பயணம் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள சைப்ரசுக்கு செல்லும் எனது பயணம் மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஜனாதிபதியின் பயணம் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியாவுக்குமான வர்த்தகம் மற்றும் தொழில்முறை உறவுகள் மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.