உலக செய்திகள்

இந்தோனேசிய பயணத்தை நிறைவு செய்துவிட்டு மலேசியா சென்றார் பிரதமர் மோடி

இந்தோனேசிய பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி மலேசியா சென்றடைந்தார். #PMmodi

ஜகார்த்தா,

பிரதமர் மோடி கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 5 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் இந்தோனேசியா சென்றார். நேற்று அவர் அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவை தலைநகர் ஜகார்த்தாவில் சந்தித்து பேசினார்.

இரு தலைவர்களும் ராணுவம், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிலையில், இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, மலேசியா சென்றடைந்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி , மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை புட்ரஜயா நகரில் வைத்து சந்தித்து பேச உள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் புட்ரஜயா நகரம் உள்ளது. ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து இருந்த பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக அங்கு சென்று உள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை