உலக செய்திகள்

ஈகுவடார் சிறைகளில் கைதிகள் மோதல்: 18 பேர் பலி; போலீசார் பலர் காயம்

ஈகுவடார் நாட்டு இரு சிறைகளில் ஏற்பட்ட கைதிகள் இடையேயான மோதலில் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குயிட்டோ,

ஈகுவடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அந்நாட்டின் 2 சிறைகளில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் நேற்று 18 பேர் உயிரிழந்தனர். நாட்டின் குவாயாகு மற்றும் லட்டாகியூங்கா சிறைகளில் நேற்று கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் 18 கைதிகள் உயிரிழந்தனர். 9 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 35 கைதிகள் காயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, போலீஸ் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லட்டாகியூங்கா சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த 45 கைதிகளை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரியில் நடந்த மோதல் சம்பவத்தில் 3 சிறைகளை சேர்ந்த 79 கைதிகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு