Image Courtesy: AFP 
உலக செய்திகள்

உக்ரைன் போரால் தனியார் ராணுவ வீரர்களுக்கு தேவை அதிகரிப்பு: தினசரி சம்பளம் ரூ.1.5 லட்சம்..!!

உக்ரைன் போரால் தனியார் ராணுவ வீரர்களின் தேவை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உக்ரைனில் நடக்கிற போரால், ரகசியமாக அந்த நாட்டுக்குச் சென்று, ரஷிய படைகளுக்கு எதிராக ஒரு நல்லதொரு தொகைக்காகப் போரிடத்தயாராக இருக்கிற தனியார் ராணுவ வீரர்களின் தேவை அதிகரித்துள்ளது என்று பி.பி.சி. தெரிவித்துள்ளது.

ஆள் சேர்ப்புக்கான நிபந்தனையாக தன்னார்வலர்கள் பல மொழி பேசுகிறவர்களாக இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டாலர் வரை (சுமார் ரூ.1.5 லட்சம்) ஊதியம், மேலும் போனஸ் வழங்கப்படும், இவர்கள் போரில் சிக்கிய குடும்பங்களை மீட்க உதவ வேண்டும் என்று கூறப்படுகிறது.

தனியார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் பணி புரிகிறவர்களுக்காக, சைலடன்ட் புரபசனல்ஸ் என்ற வேலை வாய்ப்பு இணையதளத்தில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி உள்ளது.

தனியார் ராணுவ நிறுவனங்கள், போரில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை பிரித்து அனுப்புகிறார்கள் என தெரிகிறது.

உக்ரைனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மீது போர் மூளுவது போன்று தன்னார்வ போர் வீரர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

மேற்கத்திய தன்னார்வ போர் வீரர்கள், உக்ரைனில் போரில் ஈடுபட்டாலும், அவர்கள் உக்ரைனிய சகாக்களைப்போலவே ஊதியம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊதியம் பெறுகிற பாதுகாப்பு பணியாளர்களுக்கான தேவை, அவர்களில் பலர் முன்னாள் படை வீரர்களாக இருக்க வேண்டும், எந்தப்பொறுப்பும் இல்லாமல் சண்டையிட்டுக் கொல்ல பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை