உலக செய்திகள்

இங்கிலாந்து உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும் - ரிஷி சுனக்

உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக இங்கிலாந்து இருக்கும் என அந்நாட்டு பிரதமர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதிமந்திரியுமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

உக்ரைன் நாடு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்தவகையில் உக்ரைன் இன்று 31 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:- உக்ரைனின் உறுதியான மன தைரியத்தை பாராட்ட வேண்டும். இங்கிலாந்து உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், வணிக உறவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பது நம்மை மேலும் வளப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். ரஷியா மீது உக்ரைன் போர் தொடுத்து இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவுறுவது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை