புது டெல்லி
மோடி மியான்மருக்கு போயுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை இக்கோரிக்கையை வெளியிட்டுள்ளது.
மோடி அரசு ரோஹிங்கியா மக்களை பாதுகாக்க தான் ஏற்றுள்ள பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. பிரதமர் மோடி மியான்மர் அரசிடம் அம்மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், அப்படி உதவிகளை மறுப்பது மனித நேயமற்றது என்று மன்னிப்பு சபை கூறியுள்ளது. உள்துறை அமைச்சர் கிர்ரென் ரிஜ்ஜூ இந்தியாவிற்குள் வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று வர்ணித்துள்ளார். இந்தியாவில் 40,000 ரோஹிங்கியா மக்கள் உள்ளார்கள். இதுவரை மியான்மர் நாட்டிலிருந்து 1,23,000 பேர் வெளியேறியுள்ளதாக ஐநா அகதிகள் சபை கூறுகிறது.