உலக செய்திகள்

“உக்ரைன்” பொம்மை ஆட்சி நடைபெறும் அமெரிக்காவின் காலனி நாடு - ரஷ்ய அதிபர் புதின் கடும் தாக்கு

கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இருநாடுகள் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் உக்ரைன் ஒரு கைப்பாவை ஆட்சியைக் கொண்ட அமெரிக்க காலனி நாடாக செயல்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். மேலும் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முன்னதாக உக்ரைனுக்குச் சொந்தமான டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீரிக்குமாறு அதிபர் புதினைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த சூழலில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த இரண்டு நகரங்கள் பிரச்சினைக்குரிய பகுதியாக இல்லாமல் தனி நகரங்களாக அழைக்கப்பட்டு, அதன் தலைவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது