மாஸ்கோ,
கொரோனா தடுப்பூசிக்கு எதிரான தடுப்பூசியை உலக அளவில் முதன் முதலாக ரஷ்யா பதிவு செய்தது. ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியானது உலக அளவில் செயல் திறன் மிக்க தடுப்பூசிகளில் ஒன்றாக உள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல் திறன் கிட்டதட்ட 91 சதவீதமாக உள்ளது.
ரஷியாவில் ஏற்கனவே 3 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், 4-வது கொரோனா தடுப்பூசி மிக விரைவில் புழக்கத்துக்கு வரும் என அந்த நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் ஸ்புட்னிகி வி தவிர எபிவேக்கொரோனா மற்றும் கோவிவேக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.