துபாய்
கத்தார் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தங்களது வணிகம் முன்பு போலவே தொடரும் என்று கூறியுள்ளது. கத்தார் நாட்டிலிருந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு இயற்கை எரிவாயு விநியோகம் ஆகிறது. மேலும் கத்தாரின் வாடிக்கையாளர்களான எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் எரிவாயுவை தொடர்ந்து அளித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்நாடுகள் கத்தாரிடம் தூதரக உறவுகளை துண்டித்துள்ளன.
இதனிடையே கத்தார் தனது தரப்பை எடுத்துக் கூற முன்னாள் அமெரிக்க தலைமை வழக்கறிஞர் ஜான் ஆஷ்கிராஃப்ட்டை நியமித்துள்ளது. இவரது பணி அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் கத்தார் தீவிரவாத ஆதரிப்பு செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை என நிரூபித்துக் காட்ட வேண்டியதேயாகும்.