உலக செய்திகள்

உலகம் முழுவதும் 120 கோடி கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை: குவாட் நாடுகள் உறுதி

இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகள் உலகம் முழுவதும் 120 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக அளிக்க உறுதி அளித்து உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில், நான்கு நாடுகளும் கூட்டாக இணைந்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்தோ-பசிபிக் மண்டல பகுதிகளுக்கு இதுவரை 7.9 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, உலகம் முழுவதும் 120 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக அளிக்க இருக்கிறோம் என உறுதி அளித்துள்ளது.

தொடர்ந்து, அடுத்த பெருந்தொற்றுக்கும் சிறந்த முறையில் தயாராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறோம் என அந்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு