Image Courtacy: ANI 
உலக செய்திகள்

பாகிஸ்தான்: கால்பந்து மைதானம் அருகே குண்டுவெடிப்பு - போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயம்

பாகிஸ்தானில் குவெட்டாவில் உள்ள கால்பந்து மைதானம் அருகே குண்டு வெடித்ததில் போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

குவெட்டா,

பலுசிஸ்தானின் குவெட்டாவில் உள்ள டர்பட் ஸ்டேடியத்திற்கு வெளியே இன்று நடந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நகரின் விமான நிலைய சாலையில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருந்த போது இந்த வெடிப்பு சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் இது மைதானத்தில் பீதியை ஏற்படுத்தியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது