உலக செய்திகள்

ரபேல் விமான பேர குற்றச்சாட்டுகளுக்கு இந்தி நடிகை மூலம் பா.ஜனதா பதிலடி

ரபேல் விமான பேர குற்றச்சாட்டுகளுக்கு இந்தி நடிகை மூலம் பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை மறுத்து வரும் பா.ஜனதா, இந்த ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை இந்தி நடிகை பல்லவி ஜோஷியை வைத்து விளக்கம் அளித்துள்ளது.

பல்லவி ஜோஷி நடித்து, 2.19 நிமிட நேரம் ஓடும் வீடியோ படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு நேற்று வெளியிட்டது.

அதில், மலிவான விலையில் போர் விமானங்கள் வாங்குவதே ரபேல் ஒப்பந்தத்தின் நோக்கம். இதுபோல், ஏவுகணைகளையும் வாங்குவோம். அவற்றின் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி மிச்சம் ஆகியுள்ளது என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம் என்று பல்லவி ஜோஷி கூறுகிறார்.

தனது பேச்சுக்கிடையே, உருளைக்கிழங்கு தொழிற்சாலை என்று யாரையோ பெயர் குறிப்பிடாமல் பல்லவி ஜோஷி கிண்டல் செய்வதும் வீடியோவில் இடம்பெற் றுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது