காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் 2 வார கால சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அவர் ஆதரவாளர்கள் முன் இன்று பேசும்பொழுது, கடந்த 1980ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது தந்தை மற்றும் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி பிரதமர் அலுவலகத்தில் டைப்ரைட்டர்களுக்கு பதிலாக கணினிகளை கொண்டு வர விரும்பினார்.
அங்கிருந்த அதிகாரிகள், கணினிகள் வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சாம் (பிட்ரோடா) மற்றும் எனது தந்தை தமக்கே உரிய பாணியில், உங்கள் டைப்ரைட்டர்களை நீங்கள் பத்திரமுடன் வைத்து கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் செய்ய போவது என்னவெனில், ஒரு மாதத்திற்கு அவற்றிற்கு பதிலாக கணினிகளை கொண்டு வந்து பயன்படுத்த செய்ய போகிறோம். ஒரு மாதம் கழிந்த பின் உங்களது டைப்ரைட்டர்களை உங்களிடமே கொடுத்து விடுவோம் என கூறியுள்ளனர்.
ஒரு மாதம் கழித்து டைப்ரைட்டர்களை எனது தந்தை திரும்ப கொடுத்தபொழுது, கணினிகள் வேண்டும் என அதிகாரிகள் சண்டையிட ஆரம்பித்து விட்டனர் என ராகுல் கூறியுள்ளார்.
இந்தியாவில் புதிய கருத்துகள் பரவலாக வருவதற்கு வெகுநாளாகும். ஆனால், ஒரு கருத்து சிறந்தது என தெரிய வந்தபின், உடனடியாக இந்தியா அதனை புரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தி, அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என உலகிற்கு தெரியப்படுத்துகிறது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.