கெய்ரோ,
எகிப்து நாட்டில் குவாலியுபியா பகுதியில் ரெயில் ஒன்று இன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரெயில் பெட்டிகள் பல தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தன. அதில் பயணிகள் பலர் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்து உள்ளனர். 109 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. எனினும், ரெயில் பெட்டிகள் கவிழ்ந்ததில் அதில் சிக்கிய பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எகிப்தில் மின்யா அல் குவாம் பகுதியில் ரெயில் தடம் புரண்டதில் 15 பேர் காயமடைந்தனர். அந்த விபத்து நடந்து ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் இறுதியில், தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், 19 பேர் பலியானார்கள். 185 பேர் காயமடைந்தனர். எகிப்தில் சமீப நாட்களாக அடுத்தடுத்து ரெயில் விபத்துகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.