கோபன்ஹேகன்,
டென்மார்க் நாட்டின் நைபோர்க் நகரில் சிலாந்து மற்றும் புனென் தீவுகளை இணைக்கக்கூடிய மிகப்பெரிய ரெயில்வே பாலம் உள்ளது. நேற்று அதிகாலை இந்த ரெயில்வே பாலத்தில் பயணிகள் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த சரக்கு ரெயில் பயணிகள் ரெயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.