உலக செய்திகள்

பாகிஸ்தானில் மழை, பலத்த காற்றுக்கு 5 பேர் பலி

பாகிஸ்தானில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று வீச்சில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

கைபர் பக்துன்க்வா,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் நேற்றிரவும், இன்றும் (ஞாயிற்று கிழமை) கனமழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில் 8 வீடுகள் இடிந்து விழுந்தன என மாகாண பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் பலத்த காற்றுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர்.

அந்த மாகாணத்தில் பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சித்ரால் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகள் அடைப்பட்டு உள்ளன. அனைத்து பகுதிகளிலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை