உலக செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்:இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.

தினத்தந்தி

கொழும்பு,

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அடிபணிந்த மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதைத்தொடர்ந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இலங்கையில் கடும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக உச்ச கட்ட பதற்றம் இலங்கையில் நிலவி வருகிறது. இலங்கையில் ஏற்படும் அடுத்தடுத்த திருப்பம் குறித்த தகவல்களை அண்மைச் செய்திகளாக கீழ் காணலாம்.

மே 12, 9.00 PM

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மே 12, 7.30 PM

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே வாழ்த்து

மே 12, 6.40 PM

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் . 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை பொறுப்பேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மே 12, 5.00 PM

இலங்கை பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை அதிபர் கோட்டபய ராஜபக்சே நிராகரித்ததாக தகவல்

பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்ரமசிங்கேவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அதிபர் தகவல்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு அதிபர் கோட்டபய ராஜபக்சே தெரிவித்துள்ளதாக தகவல்

மே 12, 3.45 PM

ரணில் விக்ரமசிங்கேவிற்கு போராட்டக்காரர்கள் எச்சரிக்கை

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்று மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதேவேளையில், ராஜபக்சேக்களை காப்பாற்றும் நோக்கில் ரனில் பதவியேற்பு நடைபெற்றால், ரனிலை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை தொடரவேண்டும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

மே 12, 3.00 PM

இலங்கையின் புதிய பிரதமராக இன்று மாலை ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கிறார்.

மே 12, 2.00 PM

இலங்கையில் ஆட்சியமைக்க தயார்"- அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு, 4 நிபந்தனைகளுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் கடிதம்.

அதிபர் பதவி விலகினால், புதிய அரசாங்கத்தை அமைக்க தயார், இரு வாரங்களுக்குள் 19வது திருத்த சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மே 12, 1.00 PM

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் -நமல் ராஜபக்ச

நானும், தந்தையும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் "- மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவு

மே 12, 12.00 PM

மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல இலங்கை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

மே 12, , 11.00 AM

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல் - அதிபர் மாளிகை அறிவிப்பு

இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்ப்பட்ட நிலையில், பிற்பகல் இரண்டு மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டது . தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும், இந்த ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் இலங்கை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்