உலக செய்திகள்

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் இடம் பெறும் 2 இஸ்லாமிய பெண்கள்

அமெரிக்காவில் இடைத்தேர்தலில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் 2 இஸ்லாமிய பெண்கள் இடம் பெறப் போகிறார்கள்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இடைத்தேர்தலில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றது ஜனநாயக கட்சி . எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 218 இடங்களை கைப்பற்றி உள்ளது.

வெர்மான்ட் மாகாணத்தின் கவர்னர் தேர்தலில் கிறிஸ்டின் ஹால்குஸ்ட் ( வயது 29) என்ற திருநங்கை போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்று முதல் திருநங்கை கவர்னராகி உள்ளார்.

கூடுதலாக, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு இரண்டு முஸ்லீம் பெண்கள் உறுப்பினர்கள் கிடைத்து உள்ளனர். சோமாலிய அகதி இலன் ஒமர் மற்றும் பாலஸ்தீனியத்தை சேர்ந்த ரஷிதா தலாப் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

இருவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். ஒமர் மினியாபோலிஸ், மினசோட்டாவில் வெற்றி பெற்றார். தலாப், டெட்ராய்ட் மாவட்டம் டியர்பார்னில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்