உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - டிரம்புக்கு, புதின் கடிதம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என டிரம்புக்கு, புதின் கடிதம் எழுதி உள்ளார்.

தினத்தந்தி

மாஸ்கோ,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருக்கிறது என புதின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி என புதின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

அதே போல் சிரிய அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷியா தொடர்ந்து செய்யும் என உறுதியளித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்