Image Courtesy: AFP 
உலக செய்திகள்

மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சி தொடர்கிறது - செஞ்சிலுவைச் சங்கம்

மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்கு அந்நகரத்திற்கு செல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்திருந்தது. மூன்று கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புடன் செஞ்சிலுவை சங்க குழுவினர் மரியுபோல் நகருக்கு செல்ல முடியாமல் சபோரிஜியாவுக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் வெற்ற பெற இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை மதித்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் நகரத்தை விட்டு வெளியேறும் மக்களுக்கு உதவும் நடவடிக்கை தொடர்கிறது என்று தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்