உலக செய்திகள்

நைஜீரியாவில் 3 வாரங்களுக்கு முன் கடத்தப்பட்ட 28 மாணவர்கள் விடுவிப்பு

நைஜீரியாவில் 3 வாரங்களுக்கு முன் கடத்தப்பட்ட 28 மாணவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

லாகோஸ்,

நைஜீரியா நாட்டில் வடக்கே கடுனா மாகாணத்தில் கடந்த 5ந்தேதி பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள் 121 பேரை கடத்தல்காரர்கள் கடத்தி சென்றனர்.

இதன்பின்னர் அந்நாட்டு பண மதிப்பின்படி, ஒரு மாணவருக்கு தலா 5 லட்சம் நைராக்கள் பிணை தொகையாக கொடுக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில், உடல்நலனை கவனத்தில் கொண்டு அவர்களில் ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். 5 பேர் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்து விட்டனர்.

இந்த சூழலில், கடத்தப்பட்ட மாணவர்களில் 28 பேர் 3 வாரங்களுக்கு பின் நேற்று (ஞாயிற்று கிழமை) விடுவிக்கப்பட்டு உள்ளனர். எனினும், 80 மாணவர்கள் வரை இன்னும் விடுவிக்கப்படாமல் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்பதற்கான ஆலோசனையை அரசு நடத்தி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு