உலக செய்திகள்

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் இடையே பிளவு; புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க திட்டம்...?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுவதால், அவர் மீது துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுவதால், ஜோபைடன் மீது கமலா ஹாரிஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலா ஹாரிசுக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பதவியை வழங்கிவிட்டு, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, ஜோ பைடன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை பிரச்சினை தொடர்பான விவகாரத்தில், அவரது செயல்பாடு ஜோ பைடனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், துணை ஜனாதிபதியை விட, போக்குவரத்து அமைச்சராக உள்ள பீட் பட்டிகெக்கிற்கு, ஜோ பைடன் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில், கமலா ஹாரிசின் பிரச்சாரம், அமெரிக்க பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம், ஜோ பைடனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

2024 அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம், என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதி - துணை ஜனாதிபதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதனை இரு தரப்பிலும் மறுத்து உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு