டாக்கா,
வங்காளதேசத்தின் ஜஷூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட பசுக்களை வாங்குவதற்காக கால்நடை வர்த்தகர்கள் சிலர் தனியார் கார் ஒன்றில் சென்றுள்ளனர். அவர்கள் தொப்பகோலா பகுதியில் பேனாபூல் என்ற இடத்தில் சென்றபோது லாரி ஒன்றின் மீது அவர்கள் கார் மோதியது.
இதில், காரில் இருந்த நயன் அலி (வயது 40), ஜோனி மியா (வயது 38), நயீம் உசைன் (வயது 50), சத்மான் (வயது 48) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். சகாபுதீன் என்ற மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.