கோப்புப்படம் 
உலக செய்திகள்

லாவோஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகளில் 35 பேர் பலி..!!

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகளில் 35 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

வியன்டியேன்,

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்தாக, அந்த நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, 552 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தலைநகர் வியன்டியேனில் 45 விபத்துகளில் 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாதது போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை