உலக செய்திகள்

அமெரிக்காவின் கோரிக்கையை சர்வதேச அணுசக்தி முகமை நிராகரிக்கும் - ரூஹானி

அமெரிக்காவின் கோரிக்கையை சர்வதேச அணுசக்தி முகமை நிராகரிக்கும் என்று ஈரான் அதிபர் ரூஹானி நம்பிக்கைத் தெரிவித்தார்.

தினத்தந்தி

அங்காரா

அமெரிக்கா ஈரானின் ராணுவ தளங்களுக்குள் சென்று ஆய்வு நடத்த ஐ நா அணு ஆயுத சோதனையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமையிடம் வேண்டுகோள் விடுத்தது.

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஈரானிய அதிபர் தோன்றும்போது நமது ராணுவ தளங்களை சோதனை செய்யச்சொல்லும் அமெரிக்காவின் கோரிக்கை ஏற்கப்படாது என்று கூறினார்.

ஐநாவிற்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே கடந்த வாரம் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தடை செய்யப்பட்ட (அணு ஆயுதம்) நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஈரானிய ராணுவத் தளங்களை பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அதிபர் இவ்வாறு நம்பிக்கைத் தெரிவிப்பதற்கு பின்னாலுள்ள காரணங்களை சுட்டிக்காட்டுவது போல எவ்விதமான சங்கேதகங்களையும் குறிப்பிடவில்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு