பாரீஸ்
இங்கிலாந்து இளவரசியான கேட் மிடில்டன் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். அப்போது, நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு மேலாடை இல்லாமல் நின்றுக்கொண்டு இருந்தபோது பத்திரிகை நிருபர் ஒருவர் அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இளவரசியின் அனுமதி இல்லாமல் அந்த அரை நிர்வாணப்படம் பாரீஸில் வெளியாகும் குளோசர் பத்திரிகையில் அச்சிடப்பட்டது.பத்திரிகையின் இந்த செயலால் அரண்மனைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக இளவரசர் வில்லியமும் இளவரசி கேட் மிடில்டனும் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், பத்திரிகையின் இந்த அத்துமீறலுக்கு 1.5 மில்லியன் யூரோ( ரூ.15 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என கேட் மிடில்டன் கோரி இருந்தார்.இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று பாரீஸ் நீதிமன்றத்தில் நடந்தது.அப்போது, இங்கிலாந்து இளவரசியின் அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட குளோசர் பத்திரிகை இளவரசிக்கு 1,03,000 யூரோ(ரூ1 கோடி ) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் ஆபாச போட்டோ எடுத்த புகைப்பட நிபுணர்கள் சிரில் மொராயூக்கு ரூ.10 லட்சமும், டொம்னிக் ஜகோ விட்சுக்கு ரூ.5 லட்ச மும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பத்திரிகை ஆசிரியர் மற்றும் பதிப்பாளருக்கு தலா ரூ.36 கோடி அபராதமும் விதித்தது