உலக செய்திகள்

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ரூ.26 ஆயிரம் கோடி; அமெரிக்க ராணுவம் ஒதுக்கீடு செய்தது

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதை தடுக்கும் வகையில் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்து, அதற்கான நிதியை பெற நாடாளுமன்றத்தை நாடினார்.

வாஷிங்டன்,

ஜனநாயக கட்சியினர் இதற்கு முட்டுக்கட்டை போட்டதால் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே எல்லைச்சுவர் எழுப்புவதற்கான நிதியைப் பெறும் வகையில் டிரம்ப் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இது ராணுவத்துக்கான நிதியை எல்லைச்சுவர் திட்டத்துக்கு பயன்படுத்த வழிவகை செய்யும்.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய எல்லைச்சுவர் எழுப்புவதற்காக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் 3.6 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 ஆயிரத்து 902 கோடியே 90 லட்சம்) ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது மெக்சிகோ எல்லையில் 280 கி.மீ. தூரத்துக்கு தடுப்புச்சுவர் அமைக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை திட்டமிட்டு நிறைவேற்றுமாறு ராணுவ பொறியாளர் பிரிவுக்கு பென்டகன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ராணுவத்துக்கான நிதியில் இருந்து 3.6 பில்லியன் டாலர்களை எல்லைச்சுவர் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தின் 127 திட்டங்கள் கிடப்பில் போடப்படுகிறது என பென்டகன் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ராணுவ நிதியை எல்லைச்சுவருக்கு திருப்புவதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் அரசாங்க நிறுவனங்களுக்கான வரவு செலவு திட்டங்களை உருவாக்குவதில் நாடாளுமன்றத்தின் பங்கைத் தவிர்க்க முயற்சிக்கிறது என ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு